கம்பைநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இரவு நேரத்தில் பூட்டப்பட்டதால், சுகாதார நிலைய நுழைவு வாயிலில் இளம்பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.
இதுகுறித்த விவரம்:
தருமபுரி மாவட்டம், கொங்கரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி கோவிந்தன் மனைவி தீபா (23). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், தீபாவை 3-வது பிரசவத்துக்காக வியாழக்கிழமை விடியற்காலை சுமார் 4 மணியளவில், அரூர் அருகேயுள்ள கம்பைநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.
அப்போது, ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டப்பட்டிருந்ததாம். அங்கு மருத்துவர்கள், செவிலியர்கள் ஒருவரும் இல்லையாம். இந்த நிலையில், இளம்பெண் தீபாவுக்கு பிரசவ வலி அதிகமானதால், மருத்துவமனை நுழைவு வாயிலில் அவருடன் வந்த கிராமத்துப் பெண்கள் பிரசவம் பார்த்துள்ளனர். இதில் தீபாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தொடர்ந்து, தீபா மற்றும் அவரது குழந்தையை 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர்.
பொதுமக்கள் புகார்: கம்பைநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய மருத்துவமனையாகும். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மட்டுமே பணியில் உள்ளனர். ஆனால், இங்கு 2 மருத்துவர்கள், 3 செவிலியர்கள் பணியில் இருக்க வேண்டும். இந்த நிலையில், பணியாளர் பற்றாக்குறையால் இரவு நேரத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை பூட்டிவிட்டுச் சென்று விடுகின்றனராம்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இரவு நேரத்தில் பூட்டப்படுவதைக் கண்டித்து, தீபாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கம்பைநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் ஜீவானந்தனை நேரில் சந்தித்து புகார் செய்தனர்.
மேலும், இளம்பெண்ணுக்கு மருத்துவமனை நுழைவு வாயிலில் பிரசவம் பார்க்கப்பட்ட சம்பவம் குறித்து காரிமங்கலம் வட்டாட்சியர் ரேவதி, கம்பைநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர், செவிலியர், பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஹோர்முஸ் நீரிணை: சீன, ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் உரையாடல்!

3 மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா

தொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

மாநிலங்களவையில் நிதின் நவீன் உள்பட புதிய எம்பிக்கள் பதவியேற்பு!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


