
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் பகுதியில் தனியார் வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது. அந்த வளாகத்தின் தரைத் தளத்தில் திங்களன்று மாலை தீடீர் தி விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மூன்று தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்திற்கு மின் கசிவு காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தின் காரணமாக அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.