உத்திரகோசமங்கை மரகத நடராஜர் சிலை திருட்டு முயற்சி

பல கோடி ரூபாய் மதிப்பிலான 5 அடிக்கும் மேல் உயரம் கொண்ட மரகத நடராஜர் சிலை ஞாயிற்றுக்கிழமை திருட முயற்சிக்கப்பட்டது. 
உத்திரகோசமங்கை மரகத நடராஜர் சிலை திருட்டு முயற்சி
Updated on
1 min read

பல கோடி ரூபாய் மதிப்பிலான 5 அடிக்கும் மேல் உயரம் கொண்ட மரகத நடராஜர் சிலை ஞாயிற்றுக்கிழமை திருட முயற்சிக்கப்பட்டது. 

ராமநாதபுரம் அருகே மிகவும் பழமை வாய்ந்த உத்திரகோசமங்கை கோயில் உள்ளது. ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் தோன்றுவதற்கு முன்பிருந்தே இத்திருக்கோயில் உள்ளது. இங்கு வழிபட்ட பின்னர் தான் ராவணனுக்கு திருமணப் பேறு ஏற்பட்டதாக வரலாறு உண்டு. மேலும் ராவணனின் வழிகாட்டுதலின்படி, மண்டோதரி இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டு புத்திரப் பேறு அடைந்தார். 

இத்திருத்தலத்தில் உள்ள மரகத நடராஜர் சிலை மிகவும் பிரசித்தம்.   5 அடிக்கும் மேல் உயரம் கொண்ட இந்த மரகதத் திருமேனியை மார்கழி மாதம் நடைபெறும், ஆருத்ரா தரிசனத்தின் போது மட்டுமே காண முடியும். மற்றபடி வருடம் முழுவதும் இந்த நடராஜர், சந்தனக் காப்பு அலங்காரத்திலேயே காட்சியளிப்பார். 

இந்நிலைியல்,  பல கோடி ரூபாய் மதிப்பிலான இந்த மரகத நடராஜர் சிலையை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் திருட முயற்சி நடைபெற்றுள்ளது. 

ஆனால், பூட்டை உடைக்க முயன்ற போது அங்கிருந்த கோயில் அபாய எச்சரிக்கை மணி ஒலித்ததால் சிலையை திருட முயன்ற 2 கொள்ளையர்களும் தடுக்க முயன்ற காவலாளி  செல்ல முத்துவின் தலையைில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com