எந்தத் தேர்தலாக இருந்தாலும் அதிமுக தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பதுதான் ஜெயலலிதாவின் முடிவு என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் திங்கள்கிழமை அளித்த பேட்டி:
ரகசிய சந்திப்பு: மு.க.ஸ்டாலினும், தினகரனும் பல முறை ரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளனர் என்ற தகவல் எங்களுக்குத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கும் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயனுக்கும் இடையே மோதல் நடைபெற்றது குறித்து கேள்வி எழுப்புகிறீர்கள். அது பற்றிய முழு விவரமும் இரு தரப்பிலும் கேட்கப்பட்டுள்ளது.
திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்பட 20 தொகுதி இடைத்தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி அதிமுக சார்பாக 20 தொகுதிகளுக்கும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை தொடங்கி பணியாற்றி வருகின்றனர். உறுதியாக 20 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்.
தேர்தல் பொறுப்பாளர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் அதிமுக ஆட்சி நீடிக்கும் என்று முதல்வர் பேசியதாக செய்திகள் வெளியாகின. எந்தச் சூழலிலும் முதல்வர் அப்படிப் பேசவில்லை. 20 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற கருத்தைத்தான் நிர்வாகிகளிடம் அவர் தெரிவித்தார். நீங்கள் சொல்லும் மனக்கணக்கான 4, 8 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்றெல்லாம் அவர் சொல்லவில்லை.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் வந்து சேர வேண்டும் என்று அழைப்பு விடுத்தது எங்கள் பெருந்தன்மை. மீண்டும் அவர்கள் அதிமுகவில் சேருவதும், சேராததும் அவர்களின் மன நிலையைப் பொருத்ததாகும்.
தனித்துப் போட்டி: இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தல் மட்டுமல்ல எந்தச் சூழலிலும், எந்தத் தேர்தலாக இருந்தாலும் அதிமுக தனித்து நின்றுதான் வெற்றி பெறும் என்ற முடிவை ஜெயலலிதா எடுத்தார். அதிமுகவுடன் ஒருமித்த கருத்துள்ள கட்சிகள் வந்தால் அவர்களுடன் இணைந்து போட்டியிடுவோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுமக்களின் எதிா்பாா்ப்புக்கு ஏற்றாா்போல போலீஸாா் செயல்பட வேண்டும்: சென்னை காவல் ஆணையா் அமல்ராஜ்

வாய்ப்புகள் தேடிவரும் கடக ராசிக்கு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 07)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 7 2026) 12 ராசிகளுக்கும்! பொருளாதார நிலை மேம்படும்!






