கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

மொசாம்பிக் கடலோரக் காவலர்களுக்கு சென்னையில் பயிற்சி

இந்திய கடலோரக் காவல்படை சார்பில் மொசாம்பிக் நாட்டைச் சேர்ந்த 14 கடலோரக் காவல்படை வீரர்களுக்கு சென்னையில் இரண்டு வாரகால பயற்சி அளிக்கப்படுகிறது.

Updated On :6 நவம்பர் 2018, 2:23 am IST


இந்திய கடலோரக் காவல்படை சார்பில் மொசாம்பிக் நாட்டைச் சேர்ந்த 14 கடலோரக் காவல்படை வீரர்களுக்கு சென்னையில் இரண்டு வாரகால பயற்சி அளிக்கப்படுகிறது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கிழக்குப் பிராந்திய கடலோரக் காவல் படை மூலம், மொசாம்பிக் நாட்டு வீரர்களுக்கு வரும் 16 -ஆம் தேதி வரை கடலோரப் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
குறிப்பாக, கடலோரப் பகுதிகளில் ரோந்து, மீனவர்கள் பாதுகாப்பு, கடற்கொள்ளை, கப்பல்களைக் கடத்துவதைத் தடுப்பது போன்ற பல்வேறு பிரிவுகளில் இந்திய கடலோரக் காவல்படை வீரர்கள் மொசாம்பிக் கடலோரக் காவல்படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்.
இதற்காக மொசாம்பிக்கில் இருந்து கடலோர காவல்படை அதிகாரிகள் 7 பேரும், காவலர்கள் 7 பேரும் சென்னை வந்துள்ளனர். அவர்களுக்கான பயிற்சி செவ்வாய்க்கிழமை முறைப்படி தொடங்குகிறது. இப்பயிற்சியை இந்திய கடலோரக் காவல்படையின் கிழக்குப் பிராந்திய கமான்டண்ட் ஐ.ஜி. பரமேஷ்வர் தொடங்கி வைக்கிறார்.
இதேபோன்று, கடந்த சில வாரங்களுக்கு முன்பு வியட்நாம் கடலோரக் காவல்படை வீரர்களுக்கு இந்தியா சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.