விஜய் மற்றும் கலாநிதி மாறன் மீது சட்டப்படி நடவடிக்கை: சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிப்பு 

சர்க்கார் படத்தில் அரசு வழங்கும் இலவசப் பொருட்களை எரிக்கும் படியான காட்சி இடம்பெற்றதால்,  விஜய் மற்றும் கலாநிதி மாறன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்... 
விஜய் மற்றும் கலாநிதி மாறன் மீது சட்டப்படி நடவடிக்கை: சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிப்பு 
Published on
Updated on
1 min read

திருப்போரூர்: சர்க்கார் படத்தில் அரசு வழங்கும் இலவசப் பொருட்களை எரிக்கும் படியான காட்சி இடம்பெற்றதால்,  விஜய் மற்றும் கலாநிதி மாறன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படமானது தீபாவளி தினமான நேற்று (நவம்பர் 6) வெளியாகியுள்ளது.

விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு கட்டியம் கூறும் வகையில் படத்தில் சமகால அரசியலை விமர்சிக்கும் வகையில் அரசியல் கருத்துக்கள் தூக்கலாக இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. 

இந்நிலையில் புதனன்று காலை கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ , 'சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு செயல்படுவது வளர்ந்து வரும் நடிகரான விஜய்க்கு நல்லதல்ல' என்று தெரிவித்திருந்தார். 

அதேபோல இலவசங்கள் வேண்டாம் என்பதை மக்களே ஏற்க மாட்டார்கள் என்று நடிகர் விஜய்யின் சர்கார் திரைப்படத்திற்கு எதிராக தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தர்மபுரியில் கருத்து தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் சர்க்கார் படத்தில் அரசு வழங்கும் இலவசப் பொருட்களை எரிக்கும் படியான காட்சி இடம்பெற்றதால்,  விஜய் மற்றும் கலாநிதி மாறன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்தில் அரசு வழங்கும் இலவசப் பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது அரசை அவமதிக்கும் வகையிலான காட்சியாகும். 

எனவே இந்தப் படத்தில் நடித்த விஜய், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மற்றும் படத்தினை திரையிட்ட திரையரங்கங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.    

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com