தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

சென்னையில் இருந்து 740 கி.மீ. தொலைவில் கஜா புயல்: 24 மணிநேரத்தில் தீவிரமடையும்

சென்னையில் இருந்து 740 கி.மீ. தொலைவில் உருவாகியுள்ள கஜா புயல் வரும் 24 மணிநேரத்தில் தீவிரமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :13 நவம்பர் 2018, 5:36 am

DIN


சென்னை: சென்னையில் இருந்து 740 கி.மீ. தொலைவில் உருவாகியுள்ள கஜா புயல் வரும் 24 மணிநேரத்தில் தீவிரமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல், மேற்கு திசை நோக்கி மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இன்று காலை 5.30 மணி நிலவரப்படி, சென்னையில் இருந்து கிழக்கு - வடகிழக்காக 740 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு வடகிழக்காக 840 கிலோ மீட்டர் தூரத்திலும் கஜா புயல் மையம் கொண்டுள்ளது.

இது மேலும் மேற்கு மற்றும் தென் மேற்காக நகர்ந்து வரும் 24 மணி நேரத்தில் தீவிர புயல் சின்னமாக வலுப்பெற்று அடுத்த 24 மணி நேரத்தில் அதே தீவிரத்துடன் நீடிக்கும். அதன்பிறகு மேற்கு தென்மேற்காக நகர்ந்து சற்று வலுவிழந்து வடக்கு தமிழகக் கடற்பரப்பில் சென்னை - நாகப்பட்டினத்துக்கு இடைப்பட்ட தூரத்தில் நவம்பர் 15ம் ததி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல் சின்னமானது அரபிக் கடல் மற்றும் லட்சத் தீவுகளை தொட்டபடி விரிந்து பரந்து உள்ளது.

இதன் காரணமாக வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவின் ஒரு சில இடங்களில் நவம்பர் 14ம் தேதி  இரவு முதல் கன மழை பெய்யக் கூடும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அன்றைய தினம் மணிக்கு 45 - 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும். இது படிப்படியாக உயர்ந்து 14ம் தேதி நள்ளிரவில் மணிக்கு 80 - 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். அந்த நேரத்தில் கடல் பரப்பு மிக மோசம் முதல் மிக மிக மோசம் என்ற நிலையில் இருக்கும். இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Story image

நவம்பர் 15ம்  தேதி வட தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில்  கன மழை முதல் மிகக் கன மழை பெய்யும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நவம்பர் 16ம் தேதி வட தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில பகுதிகளில் கன மழை முதல் மிகக் கன மழையும், சில பகுதிகளில் அதி கன மழையும் செய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.