திருச்சி ஸ்ரீரங்கம் நரசிம்மன் தாக்கல் செய்த மனுவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் மூலவர் மற்றும் உற்சவர் சிலைகள் மாயமானது தொடர்பான வழக்கில், விசாரணை அறிக்கையை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனுவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் மூலவர் மற்றும் உற்சவர் சிலைகள் மாயமானது தொடர்பாக கடந்த 2017-ஆம் ஆண்டு புகார் அளித்தேன். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சார்பில், நீதிமன்ற உத்தரவுப்படி சிலை கடத்தல் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த அறிக்கையை ஆய்வு செய்த பின்னர் தகுந்த உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்த நீதிபதிகள் விசாரணையை வரும் நவம்பர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.