ஒரு சில தனிமனிதர்களின் இழப்பை ஒரு தலைமுறைதான் ஈடு செய்ய வேண்டும்: ந. முத்துசாமி மறைவுக்கு கமல் அஞ்சலி  

ஒரு சில தனிமனிதர்களின் இழப்பை ஒரு தலைமுறைதான் ஈடு செய்ய வேண்டும் என்று கூத்துப்பட்டறை  ந. முத்துசாமி மறைவுக்கு நடிகர் கமல் அஞ்சலி செலுத்தியுள்ளார்.  
ஒரு சில தனிமனிதர்களின் இழப்பை ஒரு தலைமுறைதான் ஈடு செய்ய வேண்டும்: ந. முத்துசாமி மறைவுக்கு கமல் அஞ்சலி  

சென்னை: ஒரு சில தனிமனிதர்களின் இழப்பை ஒரு தலைமுறைதான் ஈடு செய்ய வேண்டும் என்று கூத்துப்பட்டறை  ந. முத்துசாமி மறைவுக்கு நடிகர் கமல் அஞ்சலி செலுத்தியுள்ளார். 

உடல்நலக்குறைவால் கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 82.

தெருக்கூத்தை தமிழ் கலையின் முக்கிய அடையாளமாக்கிய ந.முத்துசாமி தஞ்சை மாவட்டம் புரிசை என்ற கிராமத்தை சேர்ந்தவர். நீர்மை உள்பட 5 நூல்களை வெளியிட்ட முத்துசாமி கசடதபற, நடை போன்ற இதழ்களில் சிறுகதை எழுதியவர். 

ந.முத்துசாமி நடத்திய கூத்துப்பட்டறையில் விஜய் சேதுபதி, விமல், பசுபதி உள்ளிட்டோர் நடிப்பு பயிற்சி பெற்றவர்கள். அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் தற்போதுள்ள பிரபலமான நடிகர்கள் பலர் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றவர்கள். ந.முத்துசாமியின் இழப்பு, தமிழ் கலை உலகத்துக்கு மிகப்பெரிய இழப்பாகும். 

இந்நிலையில் ஒரு சில தனிமனிதர்களின் இழப்பை ஒரு தலைமுறைதான் ஈடு செய்ய வேண்டும் என்று கூத்துப்பட்டறை  ந. முத்துசாமி மறைவுக்கு நடிகர் கமல் அஞ்சலி செலுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் புதனன்று வெளியிட்டுள்ள விடியோவில் தெரிவித்துள்ளதாவது:

ஒரு சில தனி மனிதர்களின் இழப்பை, ஒரு தலைமுறைத்தான் ஈடுசெய்ய வேண்டும்.  அப்படிப்பட்ட ஊர் இணையற்ற முக்கியமான சாதனையாளர் நா.முத்துசாமி. 

கூத்து, நாடக உலகம் மட்டுமின்றி  தூரத்து உறவாக சினிமா உலகமும் அவரால் பயன்பெற்றிருக்கிறது. அவரிடம் பயிற்சி பெற்று நிறைய நடிகர்கள் சினிமாவிற்கு வந்திருக்கிறார்கள். 

அந்த அளவுக்கு அவரது வீச்சு ஒரு பல்துறை வித்தகனாக அவரை மாற்றி வைத்திருந்தது  அவர் செய்த வேலையை ஒரு தலைமுறையே செய்ய வேண்டும். அவர் இருந்தபோது செய்த கடமைக்கு ஒரு கலைஞனாக நன்றி. 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.    
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com