ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

எனக்கு தமிழக முதல்வராகும் எண்ணம் இல்லை : கனிமொழி விளக்கம் 

எனக்கு தமிழக முதல்வராகும் எண்ணம் இல்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினரான  கனிமொழி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :27 செப்டம்பர் 2018, 2:43 pm

DIN

சென்னை: எனக்கு தமிழக முதல்வராகும் எண்ணம் இல்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினரான  கனிமொழி தெரிவித்துள்ளார். 

உடலநலக்குறைவால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவரான கருணாநிதி கடந்த ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து முக ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்று கொண்டார். அதேபோல் கட்சிப் பொருளாளராக துரைமுருகனும், முதன்மைச் செயலாளராக டிஆர்.பாலுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  

இந்நிலையில் எனக்கு தமிழக முதல்வராகும் எண்ணம் இல்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினரான  கனிமொழி தெரிவித்துள்ளார். 

சென்னையில் மகளிர் தொடர்பான நிகழ்வு ஒன்றில் கனிமொழி வியாழனன்று கலந்து கொண்டார். அப்போது அவரிடம் தமிழக அரசியலில் அவரின் பங்கு மற்றும் முதல்வராகும் எண்ணம் ஆகியவை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்து கனிமொழி கூறியதாவது:

முதலமைச்சராகும் எண்ணம் எனக்குத் துளியும் இல்லை. எனக்கு தில்லிஅரசியல் என்பது பழக்கமான ஒன்று. எனவே தில்லி அரசியலில் மட்டுமே எனது நாட்டம் உள்ளது. 

மேலும், அரசியலில் ஆண் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. எனவே பெண்களுக்கு அதிக அளவில் பதவி வழங்க திமுகவில் வலியுறுத்துவேன். 

இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.