கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்காததற்கு தமிழக அரசு சொல்லும் விளக்கம் இது

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க மறுப்புத் தெரிவித்துள்ள தமிழக அரசு, காந்தி மண்டபம் அருகே நினைவிடம் அமைக்க அரசு நிலத்தை ஒதுக்குவதாக அறிவித்துள்ளது.
கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்காததற்கு தமிழக அரசு சொல்லும் விளக்கம் இது

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க மறுப்புத் தெரிவித்துள்ள தமிழக அரசு, காந்தி மண்டபம் அருகே நினைவிடம் அமைக்க அரசு நிலத்தை ஒதுக்குவதாக அறிவித்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க இடம் வழங்குமாறு தமிழக அரசிடம் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரால் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் வழக்குகள் மற்றும் சட்ட சிக்கல்களைக் காரணம் காட்டி மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க தமிழக அரசு மறுத்துள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், 

திமுகவினர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த தமிழக முதல்வர் பழனிசாமி, கருணாநிதி மறைந்த செய்தியை அறிந்து கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பித்தார்கள்.

1. மிக முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் இறுதி அஞ்சலி செலுத்த ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலுள்ள இராஜாஜி ஹாலை ஒதுக்கீடு செய்யவும், அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யவும்,

2. அன்னாரது இறுதி சடங்கு அன்று 8.8.2018 அன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கவும்,

3. அன்னாருக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யவும், அத்தருணத்தில் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடவும், அன்னாரின் மீது தேசியக் கொடி போர்த்தி, இராணுவ மரியாதையுடன் குண்டு முழக்க மரியாதை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,

4. தமிழ்நாடு அரசு ஏழு நாள் துக்கம் அனுசரிக்கவும், அந்த காலக்கட்டத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும், அரசு சார்ந்த விழாக்கள் இரத்து செய்யப்படும் எனவும்,

5. தமிழ்நாடு அரசிதழில் இரங்கல் வெளியிடப்படவும் எனவும்,

6. காமராஜர் சாலையில் உள்ள மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், பல சட்ட சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தினாலும், அவ்விடத்தை ஒதுக்கீடு செய்ய இயலவில்லை. அதற்கு மாறாக, சர்தார் வல்லபாய் படேல் பிரதான சாலை முகப்பில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்கு எதிரே, காந்தி மண்டபம், இராஜாஜி மணிமண்டபம் மற்றும் காமராஜர் நினைவகத்துக்கு அருகே, அன்னாரை நல்லடக்கம் செய்வதற்கு ஏதுவாக இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்ய தயாராக இருப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார் என்று தமிழக முதன்மைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com