பேராசிரியர் அ.அ. மணவாளன் காலமானார்

சென்னைப் பல்கலைக்கழக தமிழ் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் அ.அ.மணவாளன் (84) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை காலமானார்.
பேராசிரியர் அ.அ. மணவாளன் காலமானார்

சென்னைப் பல்கலைக்கழக தமிழ் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் அ.அ.மணவாளன் (84) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை காலமானார்.
 அவருக்கு மனைவி சரசுவதி, மகன்கள் ம.சீனிவாசன், ம.ஜகன்மோகன், மகள் பிருந்தா ரவிக்குமார் ஆகியோர் உள்ளனர். பேராசிரியர் மணவாளன் திருவண்ணாமலை மாவட்டம், மோசவாடி என்ற ஊரில் 1935-ஆம் ஆண்டு பிறந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியர், பேராசிரியர், துறைத் தலைவர் என பல்வேறு பொறுப்புகளில் கடந்த 1978-ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.
 13 இலக்கியத் திறனாய்வு நூல்களையும், 4 மொழிபெயர்ப்பு நூல்களையும், 5 இலக்கியக் கோட்பாடுகள் நூல்களையும் படைத்துள்ளார். "மில்டன்- கம்பனின் காப்பிய மாந்தரின் தலைமைப் பண்பு', "பக்தி இலக்கியம்' போன்ற நூல்கள் இவரது சிறந்த படைப்புகளாகும். அரிஸ்டாட்டிலின் கவிதையியலை மொழிபெயர்த்து வழங்கியதன் அடிப்படையில் தமிழ் கல்வி உலகிற்கும், ஆய்வுலகிற்கும் பெரும் பணியாற்றியவர். "இராம காதையும் இராமாயணங்களும்' என்ற இவரது நூலுக்கு பிர்லா அறக்கட்டளையின் "சரஸ்வதி சம்மான் விருது' வழங்கப்பட்டது. பேராசிரியர் மணவாளனின் இறுதிச் சடங்குகள் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தொடர்புக்கு: 98946 59350.
 டிச.10-இல் நினைவஞ்சலி கூட்டம்: பேராசிரியர் மணவாளனுக்கு சென்னைப் பல்கலைக்கழக தமிழ்மொழித்துறை, தமிழ் இலக்கியத் துறை சார்பில் பல்கலைக்கழக வளாகத்தில் (சேப்பாக்கம்) வரும் டிச.10-ஆம் தேதி நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெறவுள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com