ஜல்லிக்கட்டை கண்காணிக்க குழு

பொங்கலையொட்டி, தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியைக் கண்காணிக்க மத்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் மாவட்ட வாரியாகக் குழுக்கள் அமைக்கப்படும் என அதன் தலைவர் எஸ்.பி.குப்தா தெரிவித்தார்.

பொங்கலையொட்டி, தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியைக் கண்காணிக்க மத்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் மாவட்ட வாரியாகக் குழுக்கள் அமைக்கப்படும் என அதன் தலைவர் எஸ்.பி.குப்தா தெரிவித்தார்.
 இதுகுறித்து சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் எஸ்.பி.குப்தா கூறியது:
 மத்திய விலங்குகள் நல வாரியத்தின் அறிவுறுத்தலின்படி, அனைத்து மாநிலங்களிலும் விலங்குகள் நல வாரியம் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அண்மையில் விலங்குகள் நல வாரியம் அமைக்கப்பட்டது. இதன் தலைவராக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இருப்பார். விலங்குகள் நல அமைப்பு என்ற பெயரில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கவும், விலங்குகள் துன்புறுத்தல், கடத்தலைத் தடுக்கவும் நாடு முழுவதும் மாவட்ட அளவிலான மிருகவதை தடுப்புச் சங்கம் அமைக்க மாநில அரசுகளுக்குப் பரிந்துரைத்துள்ளோம். இதன் தலைவராக மாவட்ட ஆட்சியர்கள் செயல்படுவர். இந்தச் சங்கத்தில் விலங்குகள் நல ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என சுமார் 6.50 லட்சம் பேரை உறுப்பினர்களாகச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம்.
 ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய அதிநவீன கால்நடை மருத்துவமனைகள் கட்ட மாநில அரசுகளுக்குப் பரிந்துரைத்துள்ளோம். மத்திய விலங்குகள் நல வாரியத்தின் அனுமதி பெறாமல் இயங்கும் விலங்குகள் நல அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
 கண்காணிப்புக் குழு: கடந்த ஆண்டு பொங்கலின்போது, எந்த விதிமீறலும் இன்றி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அதைப்போலவே இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டியைத் தமிழக அரசு நடத்த வேண்டும். இந்த ஆண்டு தமிழகத்தில் 412 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது. இந்தப் போட்டிக்கு முன்பும், பின்பும் கண்காணிக்க மத்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் மாவட்ட வாரியாக குழுக்கள் விரைவில் அமைக்கப்படும் என்றார்.
 இந்தச் சந்திப்பின்போது, தமிழ்நாடு மாநில விலங்குகள் நல வாரிய அதிகாரி எம்.இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com