தினமணி இணையதள ரங்கோலி போட்டி: வெற்றி பெற்ற 10 பெண்களுக்கு பரிசு

தினமணி இணையதளம் சார்பில் நடைபெற்ற 'பொங்கலோ பொங்கல்' ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்ற 10 பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தினமணி இணையதளம் சார்பில் நடைபெற்ற 'பொங்கலோ பொங்கல்' ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்றவர்கள். (உள்படம்) ரங்கோலி.
தினமணி இணையதளம் சார்பில் நடைபெற்ற 'பொங்கலோ பொங்கல்' ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்றவர்கள். (உள்படம்) ரங்கோலி.

தினமணி இணையதளம் சார்பில் நடைபெற்ற 'பொங்கலோ பொங்கல்' ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்ற 10 பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தினமணி இணையதளம் (www.dinamani.com), ஐநாக்ஸ் திரையரங்குடன் இணைந்து 'பொங்கலோ பொங்கல்' ரங்கோலி போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. இணையதள வாசகர்களுடன் நேரடி சந்திப்புக்காக பொங்கல் பண்டிகையை யொட்டி இந்த ரங்கோலி போட்டி நடத்தப்பட்டது. 
இது தொடர்பாக அறிவிப்பு இணையதளத்திலும், தினமணி நாளிதழிலும் வெளியானது. இந்த அறிவிப்புக்கு வாசகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. 
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாசகர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். இதில், 10 பெண்கள் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இறுதிச்சுற்று போட்டி சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐநாக்ஸ் திரையங்க வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. போட்டியில் பங்கேற்ற 10 பேரும் வண்ணமயமான ரங்கோலி கோலங்களை போட்டு அசத்தினர். சிறப்பு விருந்தினராகக் க்ரயான்ஸ் விளம்பர நிறுவனத்தின் தென் பிராந்தியத் தலைவர் விஜய்ஸ்ரீ கிருஷ்ணன் கலந்து கொண்டார். அவர் நடுவராக இருந்து, 5 வெற்றியாளர்களை தேர்வு செய்தார்.
முதல் பரிசை வனஜா ராதா கிருஷ்ணன் தட்டிச் சென்றார். அவருக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசை அனுராதா கமலக்கண்ணன் வென்றார். அவருக்கு ரூ.3 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசை ஷாலினி பெற்றார். அவருக்கு ரூ.2 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
4-ஆவது, 5- ஆவது பரிசை முறையே ரெமா ரமணி மற்றும் சந்திரா ரங்கராஜ் பெற்றனர். அவர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட்டது. மற்ற போட்டியாளர்களான குணசெல்வி, மாலா, விஜயலட்சுமி, வள்ளி அம்மாள், வித்யா ஆகியோருக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. ரொக்கப் பரிசுகளுடன் தினமணி இணையதளத்தின் பிரத்யேகக் குடைகளும், ஐநாக்ஸ் நிறுவனம் வழங்கிய திரைப்பட டிக்கெட்டுகளும், சென்னை டயமண்ட்ஸ் நிறுவனம் வழங்கிய தள்ளுபடி கூப்பனும் வழங்கப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com