
பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பட்ஜெட் தொடர், காவிரிக்காக சிறப்பு கூட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
டிடிவி தினகரன் நாளை காலை புதிய கட்சியை அறிவிக்கும் நிலையில் மாலை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதனிடையே திமுக எம்எல்ஏக்கள் கூட்டமும் நாளை மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.