ஒடிஸாவில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்ட அமித் ஷா

ஒடிஸா மாநில பாஜக தேர்தல் அறிக்கையை அக்கட்சித் தலைவர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார். 
ஒடிஸாவில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்ட அமித் ஷா

ஒடிஸா மாநில பாஜக தேர்தல் அறிக்கையை அக்கட்சித் தலைவர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார். மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் இணைந்து நடைபெறவுள்ள சூழலில் ஒடிஸாவில் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். 

இந்நிலையில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா அம்மாநிலத்துக்கான பாஜக தேர்தல் வாக்குறுதியை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார். அதில், ஆயுஷ்மான் மருத்துவக் காப்பீடு திட்டம் மற்றும் பிரதமர் விவாசயத் திட்டம் ஒடிஸாவில் நிச்சயம் அமல்படுத்தப்படும். விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன். ரூ.1 லட்சம் கோடி வரை விவசாய திட்டம். 

நிதி நிறுவன முறைகேட்டீல் ஈடுபட்டவர்களுக்கு சிறை, அதில் முதலீடு செய்தவர்களிடம் உரிய பணத்தை திரும்ப ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புவனேஸ்வர் மற்றும் கட்டாக் இடையில் மெட்ரோ ரயில் சேவை. உயர்கல்வியில் மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு இலவச இருசக்கர வாகனம். அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.3,500 கோடி செலவில் 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி.

ஒரு சதவீத வட்டியில் ஒருவருக்கு ரூ.3 லட்சம் என சுயதொழில் தொடங்க ரூ.3 ஆயிரம் கோடி கடன். ஆயிரம் கோடி ரூபாயில் சுயதொழில் திட்டங்கள். 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு உச்சகட்ட தண்டனை போன்றவை பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்ட இந்த தேர்தல் அறிக்கை வெளியீட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டது போன்று ஒடிஸா வளர்ச்சியை பிஜு ஜனதா தளம் தடுப்பதாக பாஜக தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டினார். 

அப்போது ஒடிஸா மாநிலத்தில் ஏழைகள் மேலும் ஏழ்மை நிலையை அடைவதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பில்லை, கல்வி உள்ளிட்ட துறைகளில் தேசிய அளவில் பின்தங்கியுள்ளது, அடிப்படை குடிநீர் வசதி கூட கிடையாது என்று அமித் ஷா கடுமையாக சாடினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com