சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்படும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி 

சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்ச நிதின் கட்கரி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்படும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி 

சேலம்: சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்ச நிதின் கட்கரி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

சென்னை-சேலம் எட்டு வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்திருந்தது.

அத்துடன் இந்த திட்டத்துக்காக பொதுமக்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை எட்டு வாரத்துக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்யக்கூடாது என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்ச நிதின் கட்கரி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணணை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஞாயிறன்று பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது:

சம்பந்தப்பட்ட விவசாயிகளுடன் பேசி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேலம்-சென்னை எட்டு  வழி பசுமைச் சாலை திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.

கோதாவரி நதியில் இருந்து உபரி நீர் வீணாக கடலில் கலக்கிறது;  அதனை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கொண்டு செல்ல 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தவுடன் இந்த திட்டம் முதலில் தொடங்கப்படும். இதன் மூலம் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் தண்ணீர் பிரச்சினை தீர்க்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com