தமிழகம் முழுவதும் 291 நீதிபதிகள் இடமாற்றம்

தமிழகம் முழுவதும் 28 மாவட்ட நீதிபதிகள் உள்பட 291 நீதிபதிகள் பல்வேறு நீதிமன்றங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 
தமிழகம் முழுவதும் 291 நீதிபதிகள் இடமாற்றம்
Updated on
2 min read

தமிழகம் முழுவதும் 28 மாவட்ட நீதிபதிகள் உள்பட 291 நீதிபதிகள் பல்வேறு நீதிமன்றங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் சி.குமரப்பன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு: சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீ 28 மாவட்ட நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி டி.வி.தமிழ்செல்வி, உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜுடிசியல் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 
விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி பி.சரோஜினிதேவி, சென்னை சிறுவழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜூடிசியல் பதிவாளர் ஜி.இளங்கோவன், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், வேலூர் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.ஆனந்தி, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.கயல்விழி, காஞ்சிபுரம் மாவட்ட விரைவு நீதிபதியாகவும், திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜி.மகிழேந்தி, நாகர்கோவில் லோக் அதாலத் தலைவராகவும், திருவள்ளூர் மாவட்ட லோக் அதாலத் தலைவர் நீதிபதி எம்.பிச்சம்மாள், கோவை மாவட்ட லோக் அதாலத் தலைவராகவும், வேலூர் தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி எஸ்.செல்வசுந்தரி, வேலூர் மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், சிதம்பரம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம், ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், கடலூர் மகளிர்  நீதிமன்ற நீதிபதி டி.லிங்கேஸ்வரன், பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், கோவை தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி ஜெ.புளோரா, மதுரை மகளிர் நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 
திருப்பூர் 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஏ.முகமது ஜியாபுதீன், வேலூர் 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதியாகவும், சென்னை 6-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பி.பெஞ்சமின் ஜோசப்,  கும்பகோணம் விரைவு நீதிமன்ற நீதிபதியாகவும், மதுரை 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற  நீதிபதி பி.ராஜவேல், தஞ்சாவூர் 2-ஆவது அமர்வு நீதிமன்ற நீதிபதியாகவும், கோவை நிதிநிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.பாபு, விழுப்புரம் 2-ஆவது அமர்வு நீதிமன்ற நீதிபதியாகவும், சிவகங்கை குடும்பநல நீதிமன்ற நீதிபதி ஏ.சுப்பிரமணியன், சென்னை 15-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை 15-வது கூடுதல் அமர்வு நீதிபதி எஸ்.புருஷோத்தமன், திண்டுக்கல் மகளிர் நீதிமன்ற நீதிபதியாகவும், திண்டுக்கல் மகளிர் நீதிமன்ற நீதிபதி கே.கருணாநிதி, தஞ்சாவூர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற  நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 
தஞ்சாவூர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே.பூமா ஜெயஆனந்த், கோவை 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதியாகவும், கும்பகோணம் விரைவு நீதிமன்ற நீதிபதி பா.உ.செம்மல், சிவகங்கை மகளிர் நீதிமன்ற நீதிபதியாகவும், சேலம் மகளிர் நீதிமன்ற நீதிபதி ஆர்.விஜயகுமாரி, கிருஷ்ணகிரி கூடுதல் அமர்வு நீதிமன்ற  நீதிபதியாகவும், நாமக்கல் மகளிர் நீதிமன்ற நீதிபதி பி.இளங்கோ, சேலம் 3-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.எழில், விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகவும், சென்னை 9-ஆவது சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி எஸ்.முருகானந்தம், சேலம் மகளிர் நீதிமன்ற நீதிபதியாகவும், ஈரோடு 4-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த், சென்னை 6-ஆவது கூடுதல் அமர்வு நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 
அதேபோன்று பரமக்குடி விரைவு நீதிமன்ற நீதிபதி டி.வி.அனில்குமார், சென்னை 7-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதியாகவும், ஆரணி விரைவு நீதிமன்ற நீதிபதி எஸ்.தேவநாதன், நெல்லை 2-ஆவது அமர்வு நீதிமன்ற நீதிபதியாகவும், பூந்தமல்லி 2-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஏ.பரமராஜ், தருமபுரி மகளிர் நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று, நீதிபதிகள் 82 பேரும், உரிமையியல் நீதிபதிகள் 181 பேரும் பல்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்து தலைமை பதிவாளர் குமரப்பன் அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com