
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில், அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸை அமலாக்கத் துறை பிறப்பித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, அவரை கைது செய்ய கடந்த 17 மணி நேரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் குழு 4 முறை அவரது வீட்டுக்கு வருகை தந்துள்ளன.
ஆனால், சிதம்பரம் தற்போது எங்கிருக்கிறார் என்ற தகவல் கிடைக்கப்பெறவில்லை. இதற்கிடையே, சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு மறுத்துவிட்டதால், முன் ஜாமீன் கிடைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
இந்த நிலையில், அவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அமலாக்கத் துறை சிதம்பரத்துக்கு எதிராக லுக் அவுட் எனப்படும் தேடப்படும் நபர் என்ற நோட்டீஸை பிறப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.