ப. சிதம்பரம் கைதைக் கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை சத்தியமூர்த்தி பவன் பகுதியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னையில் அண்ணா சாலையில் குவிந்த காங்கிரஸ் கட்சியினர், பாஜகவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அடையாறில் கராத்தே தியாகராஜன் தலைமையில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் ப. சிதம்பரத்தின் கைதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனுவை தில்லி உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், சிபிஐ அதிகாரிகளால், புது தில்லியில் நேற்று சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.