அரசுக் கல்லூரிகளில் அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும்: மா.கம்யூ.வேண்டுகோள் 

தமிழகத்தில் அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
அரசுக் கல்லூரிகளில் அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும்: மா.கம்யூ.வேண்டுகோள் 
Published on
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

தமிழகத்தில் உள்ள 99 அரசு கல்லூரிகள் கல்வித்துறையின் கீழ் இயங்கி வருகின்றன. இவைகளில் சுமார் 4 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இக்கல்வியாண்டில் புதிதாக 81 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் ஆசிரியர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழக அரசு 2334 கல்லூரி ஆசிரியர் பணியிடங்களுக்கு நியமனம் செய்யப் போவதாக அறிவிப்பு செய்துள்ளது. ஆனால் மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 4000 ஆகும்.  எனவே உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கு அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்பிடும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு நிரந்தர கல்லூரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யும் போது, கௌரவ விரிவுரையாளர்களுக்கு முன்னுரிமையளிக்க வேண்டுமென்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்.

மேலும் 22 முதல்நிலைக் கல்லூரிகளிலும், 19 இரண்டாம் நிலைக் கல்லூரிகளிலும், முதல்வர் பணியிடங்கள், கல்லூரி கல்வி இயக்குநர், இணை இயக்குநர் போன்ற பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளது. இத்தகைய பணியிடங்களையும் நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிபிஐ (எம்) சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com