எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 

பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக வைகை அணையில் இருந்து வியாழனன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்து வைத்தார்.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2019, 4:17 pm

DIN

தேனி: பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக வைகை அணையில் இருந்து வியாழனன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்து வைத்தார்.

தென்மேற்கு பருவமழையின் காரணமாக தமிழக நீர்நிலைகளில் பரவலாக நீர் நிரம்பியது.  இதேபோன்று கர்நாடகாவில் உள்ள கபினி உள்ளிட்ட அணைகளிலும் நீர் நிரம்பி மேட்டூர் அணையை வந்தடைந்தது.

இதனையடுத்து வைகை, பெரியார் மற்றும் மேட்டூர் அணைகளில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக தண்ணீர் திறந்து விட முதல்வர் பழனிசாமி கடந்த 2 நாட்களுக்கு முன் உத்தரவிட்டார்.

இதன்படி, தேனி மாவட்ட குடிநீர் தேவைக்கும், முதல் போக சாகுபடிக்கும் பெரியார் அணையில் இருந்து விநாடிக்கு 300 கனஅடி வீதம் இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உத்தரவிடப்பட்டது.  நீர்திறப்பால் தேனி, உத்தமபாளையம், போடி வட்டங்களில் 14,707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 

அதேபோல் வைகை அணையில் இருந்தும்  இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வியாழனன்று தண்ணீர் திறந்த்து வைத்தார்

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார், ரவீந்திரநாத் எம்.பி. உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.