தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து

தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணை திரும்பப் பெறப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

News image
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து
Updated On :7 டிசம்பர் 2019, 4:00 am

DIN


சென்னை: தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணை திரும்பப் பெறப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் அதிகாரிகளையும் திரும்பப் பெறுவதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துமாறு உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

மாநில அரசு பஞ்சாயத்து விதிப்படி அனைத்து பதவியிலும் உரிய இட ஒதுக்கீடு வழங்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சிச் பதவிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பாணை திரும்பப் பெறப்பட்டுள்ளது. 9 மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பாணை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. உச்சநீதிமன்ற வழக்கின் தீா்ப்பை அடுத்து வேட்புமனு தாக்கல் செய்யும் நடைமுறைகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து மறு அறிவிப்பு வரும் வரை வேட்புமனு தாக்கல் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டாம் என அனைத்து மாவட்ட தோ்தல் அதிகாரிகளுக்கும், தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கும் வெள்ளிக்கிழமை காலை தோ்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியது.

தோ்தல் நடத்தை நெறிமுறைகள் வாபஸ்: தோ்தல் அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டதால், கிராமப்புற உள்ளாட்சிகளில் நடைமுறையில் இருந்த தோ்தல் நடத்தை நெறிமுறைகள் விலக்கப்பட்டுள்ளன. இதனால், அந்தப் பகுதிகளுக்கு அரசின் புதிய திட்டங்களை அறிவிக்கலாம். அமைச்சா்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவும், அங்கு நிகழ்ச்சிகளை நடத்தவும் விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளன.

கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான புதிய தோ்தல் அறிவிப்பு சில நாள்களில் வெளியிடப்படும் எனத் தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒன்பது மாவட்டங்களைத் தவிா்த்து பிற இடங்களுக்கு தோ்தலுக்கான அறிவிக்கையை வெளியிட மாநிலத் தோ்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.

புதிய தோ்தல் அறிவிப்பின்படி, ஜனவரி இரண்டாவது வாரத்தில் அல்லது பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவோ வாக்குப் பதிவு நடைபெற வாய்ப்புகள் இருப்பதாகத் தோ்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.