இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

பி.எஸ்.எல்.வி.-சி48 ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

பி.எஸ்.எல்.வி.-சி48 ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளை   தெரிவித்துள்ளார்.

புவி கண்காணிப்பு மற்றும் ராணுவப் பாதுகாப்புக்கு உதவும் இஸ்ரோவின் ரிசாட்-2பி ஆா்1 செயற்கைக்கோள் உள்பட 10 செயற்கைக்கோள்களைத் தாங்கியபடி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவுதளத்திலிருந்து, புதன்கிழமை ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.-சி48 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.  அனுப்பப்பட்ட 10 செயற்கைக்கோள்களும் திட்டமிட்ட தற்காலிக சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.

மேலும்,  இஸ்ரோவின் மிகுந்த நம்பகத்தன்மை வாய்ந்த பி.எஸ்.எல்.வி. ராக்கெட், 50-ஆவது முறையாக ரிசாட்-2பி ஆா்1 செயற்கைக்கோளை தாங்கிச்சென்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்துள்ளது.

இதையடுத்து பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பலர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நாட்டின் பல்வேறு ஆய்வுகளுக்காக பி.எஸ்.எல்.வி ராக்கெட் 50ஆவது முறையாக இஸ்ரோ விஞ்ஞானிகளால் வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தப்பட்டது. இதன் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல் கல்லை எட்டியுள்ளனர். இதற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட இஸ்ரோ தலைவர், விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரது முயற்சியும், உழைப்பும் மிகவும் பாராட்டுக்குரியது. இவர்கள் நாட்டிற்கு மேலும் பெருமை சேர்த்திட என் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், மனதார வாழ்த்துகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com