தேனியில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக ஜமாத் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

தேனியில் குடியுரிமைச் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உலாமாக்கள் சபை மற்றும் ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
தேனியில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக ஜமாத் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

தேனியில் குடியுரிமைச் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உலாமாக்கள் சபை மற்றும் ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. திருத்தப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் தீவிரமடைந்து வன்முறை சம்பவங்களும் நடைபெறுகின்றன. அதனைத் தடுக்க பல்வேறு நகரங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்திலும் பெரும்பாலாக அனைத்து மாவட்டங்களிலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக எதிராக போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.

இந்த நிலையில் தேனியில் குடியுரிமைச் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உலாமாக்கள் சபை மற்றும் ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மேற்குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com