660 மில்லி கிராம் தங்கத்தில் 2020- ம் ஆண்டு காலண்டர்: சிதம்பரம் பொற்கொல்லர் சாதனை

சிதம்பரத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஜே.முத்துக்குமரன், 2020-ம் ஆண்டு பொன்னான  ஆண்டாகத் திகழ 660 மில்லி கிராம் தங்கத்தில் 2020 காலண்டரை செய்து சாதனை படைத்துள்ளார்.
தங்க காலண்டர்
தங்க காலண்டர்
Published on
Updated on
2 min read

சிதம்பரம்: சிதம்பரத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஜே.முத்துக்குமரன், 2020-ம் ஆண்டு பொன்னான  ஆண்டாகத் திகழ 660 மில்லி கிராம் தங்கத்தில் 2020 காலண்டரை செய்து சாதனை படைத்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் விஸ்வநாதன்பிள்ளை தெருவில் வசிப்பவர் ஜெயபால் பத்தர். விஸ்வகர்ம சமுதாயத்தைச் சேர்ந்த இவரது மகன் ஜே.முத்துக்குமரன் (39). 9-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் 12 வயதிலிருந்து தந்தையுடன் சேர்ந்து கவரிங் மற்றும் தங்க நகைகள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர்  20 வருடங்களாக நகை செய்யும் தொழில் செய்து வருகிறார். அந்த அனுபவத்தினால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்பில் குறைந்த அளவு தங்கத்தில் பல்வேறு சிறிய நகை மற்றும் பொருள்களைச் செய்யும் பணியில் ஈடுபட்டு பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.

இவர் வரும் புத்தாண்டு பொன்னான ஆண்டாகத் திகழ வலியுறுத்தி 660 மில்லி கிராம் தங்கத்தில் 2020 ஆண்டு 12 பக்க காலண்டரை தயாரித்து சாதனை படைத்துள்ளார். 12 மில்லி மீட்டர் அகலமும், 18 மில்லி மீட்டர் உயரத்தில் இந்த காலண்டை செய்துள்ளார். இந்த காலண்டரில் அரசு விடுமுறை, இந்து, முஸ்லீம், கிருஸ்து பண்டிகைகளையும் குறிப்பிட்டுள்ளார். இந்த காலண்டரை 660 மில்லி கிராமில் 3 மணி நேரத்தில் செய்து சாதனை படைத்துள்ளார்.

இவர் ஏற்கனவே கடந்த 2019 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம்  நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில் 1 கிராம் 420 மில்லி தங்கத்தில் இந்திய நாடாளுமன்ற கட்டட உருவத்தையும், 120 மில்லி தங்கத்தில் பெண் குழந்தைகள் ஒட்டு 100, ஓட்டு விற்பனை இல்லை என்ற ஆங்கில சொல் பதாகையுடனான உருவத்தையும், 20 மில்லி தங்கத்தில் மை வைத்த விரல் உருவத்தையும் செய்து சாதனை படைத்துள்ளார்.  கடந்த 2018 ஆண்டு புகழ்பெற்ற சவுதியில் உள்ள பள்ளி வாசல் மெக்கா,மதினா உருவங்களை 640 மில்லி கிராமில்  1 செ.மீட்டர் உயரத்தில் தங்கத்திலும், மேலும் அதனுடன் அல்லாஹ் வார்த்தை 10 மில்லி கிராம் தங்கத்தில் செய்துள்ளார்.   இவர் கடந்த 2018 ஜன.28-ம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் என்ற தலைப்பில் 850 மில்லி கிராம் தங்கத்தில் விழிப்புணர்வு உருவங்களை சிதம்பரம் இளைஞர் செய்து சாதனை படைத்துள்ளார். 

இதற்கு முன்பூ  குறைந்த அளவு தங்கத்தில் துய்மை இந்தியா திட்டம்,  புதுதில்லி செங்கோட்டை, நடராஜர் கோயில் பொற்சபை, உலக கோப்பை, தங்க ஊஞ்தல்,  தமிழக சட்டப்பேரவை முகப்பு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவம், தாஜ்மஹால் என சிறிய அளவில் உருவங்களை தங்கத்தில் செய்துள்ளார். இவருக்கு அகில இந்திய நகை வியாபாரிகள் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற விழாவில் பொற்கொல்லர் மாமணி விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com