
சென்னை: மறைந்த தமிழக முதல்வர் அண்ணா நினைவு நாளை ஒட்டி சென்னையில் வெவ்வேறு இடங்களில் நடந்த சமபந்தி போஜன நிகழ்வுகளில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்றனர்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரான அறிஞர் அண்ணாவின் 50-ஆவது நினைவு தினம் ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
அதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் கூட்டாக அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அண்ணா நினைவு நாளை ஒட்டி சென்னையில் வெவேறு இடங்களில் சமபந்தி போஜன நிகழ்வுகள் நடைபெற்றன.
இதில் கே.கே.நகரில் நடைபெற்ற நிகழ்வில் முதல்வர் பழனிசாமி பங்குபெற்றார். அதேபோல் திருவான்மியூரில் நடைபெற்ற நிகழ்வில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
வேறு சில இடங்களில்நடைபெற்ற நிகழ்வுகளில் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.