சென்னை சென்டிரல் ரயில் நிலையக் கட்டடம் 4 நாட்களுக்கு வெள்ளையாக மாறும் அதிசயம்!

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தின் அடையாளமாக விளங்கும் சிவப்பு நிறக் கட்டடம் இன்னும் 4 நாட்களுக்கு வெள்ளையாகவேக் காட்சி தரும்.
சென்னை சென்டிரல் ரயில் நிலையக் கட்டடம் 4 நாட்களுக்கு வெள்ளையாக மாறும் அதிசயம்!
Published on
Updated on
1 min read


சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தின் அடையாளமாக விளங்கும் சிவப்பு நிறக் கட்டடம் இன்னும் 4 நாட்களுக்கு வெள்ளையாகவேக் காட்சி தரும்.

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தை புனரமைக்கும் பணி நடந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன.  தற்போது அந்த கட்டடத்தின் மேற்பாகத்தில் சில பூச்சு வேலைகள் முடிந்து, ரசயானப் பூச்சும் நடந்து முடிந்துள்ளது.

இதையடுத்து, அந்த அடையாளச் சின்னக் கட்டடம் முழுவதும் வெள்ளை நிறப் பெயிண்ட் அடிக்கப்பட்டு, 4 நாட்களுக்குப் பிறகே அந்த மெருன் நிறம் அடிக்கப்பட உள்ளது. இந்த கட்டடம் கடைசியாக 2016ம் ஆண்டு புனரமைக்கப்பட்டது என்று சொல்கிறார் ரயில்வே அதிகாரி.

ராயபுரம் துறைமுக ரயில்நிலையம் அதிக நெரிசல் காரணமாக வேறு ஒரு இடத்தை முக்கிய சந்திப்பாக மாற்ற திட்டமிட்டு 1873ம் ஆண்டு சென்னை சென்டிரல் ரயில் நிலையம் உருவாக்கப்பட்டது.

ரோமானியக் கட்டடக் கலைக்கு உதாரணமாக, மிக உயர்ந்த கட்டடத்தில் கடிகாரம் அமைக்கும் வகையில் சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அமைக்கப்பட்டது.

இந்த கலாசார அடையாளமாக விளங்கும் கட்டடத்தின் அழகை பராமரிக்க ரூ.84 லட்சம் செலவிடப்படுகிறது.

இந்த கட்டடத்தை பராமரிக்க, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டடத்துக்கு பெயிண்டிங் செய்ய வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அதில்லாமல், இந்த கட்டடத்தை பாதுகாக்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்திய ரயில்வே அதிகாரிகளுக்கு ஆலோசனையும் வழங்குகிறார்கள்.

தகவல்களின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு 65 ஆயிரம் பயணிகள் வந்து செல்கிறார்கள். 57 விரைவு, அதிவிரைவு, பிரீமியர் ரயில்களும், 110 ரயில் சேவைகளும், 15 இதர ரயில்கள் சென்னை சென்டிரல் ரயில்நிலையத்தைக் கடந்தும் செல்கின்றன.

ஒவ்வொரு நாளும் 65 ஆயிரம் டிக்கெட்டுகளும், 10,500 நடைமேடை டிக்கெட்டுகளும் விற்கப்படுகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.40 லட்சம் வருவாய் கிட்டுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com