பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை
/

எம்எல்ஏ இறந்துவிட்டால் அதே கட்சியை சேர்ந்தவரை தேர்ந்தெடுக்கலாமே?: உயர்நீதிமன்றம் கருத்து

ஒரு தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் இறந்துவிட்டால், அங்கு  இடைத்தேர்தல் நடத்தாமல் அந்தக் கட்சியின் சார்பில் மற்றொருவரை தேர்ந்தெடுக்கலாமே என்று சென்னை உயர்நீதிமன்ற

News image
Updated On :14 பிப்ரவரி 2019, 1:34 am IST


ஒரு தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் இறந்துவிட்டால், அங்கு  இடைத்தேர்தல் நடத்தாமல் அந்தக் கட்சியின் சார்பில் மற்றொருவரை தேர்ந்தெடுக்கலாமே என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை கருத்து தெரிவித்துள்ளது. 
 திருவாரூர் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக, மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த தாமோதரன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்துள்ளார். அவரது மனு:
 திருவாரூர்  தொகுதிக்கு ஜனவரி 28-இல் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பின்னர் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தேர்தலை ரத்து செய்வதாக இருந்தால் மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்ற பிறகே ரத்து செய்ய வேண்டும். ஆனால் திருவாரூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட பிறகு மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இது சட்டவிரோதம். எனவே, திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
 இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ஒரு தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் இறந்துவிட்டால், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தாமல் அந்தக் கட்சியின் சார்பில் மற்றொருவரை தேர்ந்தெடுக்கலாமே என கருத்து தெரிவித்தனர். 
 மேலும், இடைத்தேர்தல் நடத்துவதை தவிர்த்தால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுவது தவிர்க்கப்படும். மக்களின் வரிப்பணம் வீணாவதை தவிர்க்கலாம். இடைத்தேர்தல் நடத்தாமல் ஏற்கெனவே வெற்றிபெற்ற கட்சியின் சார்பில் மற்றொருவரை தேர்ந்தெடுத்தால் முறைகேடுகளையும் தவிர்க்கலாம். மக்கள் குறிப்பிட்ட கட்சிக்கு தான் வாக்களிக்கிறார்கள். எனவே, அதே கட்சியைச் சேர்ந்த மற்றொருவரை தேர்தல் ஆணையம் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தொகுதிகளுக்கு இந்த கருத்து பொருந்தாது என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை வரும் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.