தைப்பூச விழாவுக்கு தமிழகத்தில் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் திருஅருட்பா ஆ.பாலகிருஷ்ண பிள்ளை நினைவு அறக்கட்டளை தலைவர் கா.தமிழ்வேங்கை தலைமையில், பல்வேறு சன்மார்க்க சங்கத்தினர்கள் சார்பில், தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
கடலூர் மாவட்டம், வடலூரில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச விழாவில் சத்திய ஞான சபையில், அருட்பெரும் ஜோதியாக திகழும் இறைவனை வழிபட, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர்.
நிகழாண்டில் வருகிற 21-ஆம் தேதி தைப்பூச விழா நடைபெறுகிறது. இதே நாளில், பழனி முருகன் கோயில் உள்பட தமிழகத்திலுள்ள பல்வேறு கோயில்களிலும் தேரோட்டம், பக்தர்களின் காவடி ஆட்டம் உள்ளிட்டவை நடைபெறும். வடலூர் தைப்பூச விழாவையொட்டி, கடலூர் மாவட்டத்துக்கு ஜனவரி 21-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் பக்தர்கள் வடலூர் தைப்பூச விழாவில் பங்கேற்பர். எனவே, தைப்பூச விழாவுக்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும். இதுதொடர்பான கோரிக்கை நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டில் தைப்பூச நாளான ஜனவரி 21-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். மேலும், ஆண்டுதோறும் பொதுவிடுமுறையாக அறிவிக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை இந்து சமய அறநிலையத் துறை, இந்து சமய அறநிலையத் துறை மண்டல ஆணையர், விழுப்புரம், கடலூர் மாவட்ட ஆட்சியர்களிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேளச்சேரி - தாம்பரம் சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் ஏன்?

விஜய் குடும்பப் புகைப்படங்கள்!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 12-ஆவது முறையாக முதலிடம் பிடித்த ஜோ ரூட்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


