தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

வீட்டில் அனைவரும் தமிழில் உரையாட உறுதியேற்க வேண்டும்: தருண் விஜய் 

வீடுகளில் தமிழிலேயே உரையாடுவோம் என தமிழ் சகோதர, சகோதரிகள் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று பாஜக

News image

தில்லி கனாட் பிளேஸில் திங்கள்கிழமை பொங்கல் கொண்டாடிய தருண் விஜய்.

Updated On :15 ஜனவரி 2019, 4:23 am IST

வீடுகளில் தமிழிலேயே உரையாடுவோம் என தமிழ் சகோதர, சகோதரிகள் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று பாஜக முன்னாள் எம்பியும், தமிழுக்காக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் குரல் கொடுத்து வருபவருமான தருண் விஜய் பொங்கல் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தில்லி, கனாட் பிளேஸில் உள்ள பாபா கரக் சிங் மார்க்கில் தருண் விஜய் திங்கள்கிழமை பொங்கல் திருநாளை கொண்டாடினார். இதைத்தொடர்ந்து, அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
பொங்கல் கொண்டாட்டம் தமிழ் மக்களுக்கு புதுவிதமான மகிழ்ச்சியைக் கொண்டு வரும். தமிழின் வளர்ச்சிக்கு இந்த ஆண்டு மிகுந்த உறுதுணையாக இருக்கும். உலகத்தை ஆளும் வகையில் தமிழின் மகிமை பரவட்டும். தமிழை பலப்படுத்துவது, இந்தியாவையும் அதன் ஒற்றுமையையும் பலப்படுத்துவதாகும்.
இந்திய மொழிகளில் தமிழுக்கென தனித்தன்மை உள்ளது. இதை தேசிய அளவில் கொண்டு செல்ல வேண்டும். பாரதியாரின் மரபும் இதுதான்.
தமிழ் சகோதர, சகோதரிகள் தங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள், பெற்றோர் உள்பட அனைத்து குடும்ப உறுப்பினர்களுடன் தமிழிலேயே உரையாடுவோம் என்று இந்த பொங்கல் நன்னாள் முதல் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும். நமது வீடுகளில் நாம் தமிழுக்கு மரியாதை தரவில்லை என்றால், மற்றவர்கள் எப்படி நமது தமிழ் மொழியின் பெருமைக்கு மரியாதை தர வேண்டும் என்று எதிர்பார்க்க முடியும்? என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.