உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி இன்று நடைபெறுமா? என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி இன்று நடைபெறுமா? என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்

2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி தடுமாறி 211/5 ரன்களை சேர்த்திருந்தது. அப்போது பலத்த மழை தொடர்ந்ததால் ஆட்டம்

2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி தடுமாறி 211/5 ரன்களை சேர்த்திருந்தது. அப்போது பலத்த மழை தொடர்ந்ததால் ஆட்டம் கைவிடப்பட்டு புதன்கிழமை மீண்டும் நடைபெறும் என நடுவர்கள் அறிவித்தனர்.

இந்த நிலையில், இன்றாவது மழையின் குறுக்கீடு இல்லாமல் அரையிறுதிப் போட்டி நடைபெறுமா என்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் இன்று தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது, இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டியின் மிச்சமிருக்கும் ஆட்டத்தை மழை குறுக்கிடாது, முழுதாக 50 ஓவர்களும் விளையாடப்படும். மகிழ்ச்சி!!! என்று பதிவிட்டுள்ளார்.

ஆனால், போட்டி நடைபெறும் மான்செஸ்டரில் இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு மழை பெய்வதற்கான வாய்ப்பு 50 சதவீதத்துக்கு மேல் இருப்பதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

பார்க்கலாம்.. நாம் பார்க்கப் போவது அரையிறுதி ஆட்டமா? அல்லது மழையின் அழகிய நடனமா? என்று!

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டர் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. லீக் ஆட்டங்களுக்கு அமைக்கப்பட்ட பிட்சில் ஆட்டம் நடத்தப்படாமல், அரையிறுதிக்காக அமைக்கப்பட்ட புதிய பிட்சில் ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.

கப்டில் அதிர்ச்சி: இதைத் தொடர்ந்து நியூஸி. தரப்பில் மார்ட்டின் கப்டில், ஹென்றி நிக்கோல்ஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின் 3.3ஆவது ஓவரில் 1 ரன்னுடன் தடுமாறிக் கொண்டிருந்த கப்டில், பும்ரா பந்துவீச்சில், கோலியிடம் கேட்ச் தந்து அவுட்டானார். அவருக்கு பின் ஆட வந்த 
கேப்டன் கேன் வில்லியம்ஸன்-நிக்கோல்ஸ் இணை 2-ஆவது விக்கெட்டுக்கு நிதானமாக ரன்களை சேர்த்தது. புவனேஷ்வர், பும்ரா இருவரும் அபாரமாக பந்துவீசி நியூஸி. அணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்தினர்.
28 ரன்கள் எடுத்திருந்த நிக்கோல்ஸை போல்டாக்கினார் ரவீந்திர ஜடேஜா. அப்போது 2 விக்கெட் இழப்புக்கு 69 ரன்களை எடுத்திருந்தது நியூஸி. 

வில்லியம்ஸன் 39-ஆவது அரைசதம்:
அதிரடி பேட்டிங்குக்கு பெயர் பெற்ற ராஸ் டெய்லர், கேப்டன் கேன் வில்லியம்ஸனுடன் இணைந்து ஸ்கோரை மெதுவாக உயர்த்தினர்.

35.2 ஆவது ஓவரின் போது, 95 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 67 ரன்களை எடுத்திருந்த கேன் வில்லியம்ஸன், சஹல் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் தந்து அவுட்டானார். இந்த உலகக் கோப்பையில் அவர் பதிவு செய்யும் 4-ஆவது அரைசதம் மற்றும் மொத்தமாக 39-ஆவது ஒருநாள் அரைசதமாகும். 3-ஆவது விக்கெட்டுக்கு வில்லியம்ஸன்-டெய்லர் இணைந்து 50 ரன்களை சேர்த்தனர்.

விக்கெட் வீழ்ச்சி: அதற்கு பின் ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் 16 ரன்களுடன் ஹார்திக் பாண்டியா பந்திலும், கிராண்ட்ஹோம் 16 ரன்களுடன் புவனேஷ்வர் பந்திலும் வெளியேறினர்.

ராஸ் டெய்லர் 50-ஆவது அரைசதம்:  ராஸ் டெய்லர் அதிரடி சிக்ஸருடன் தனது 50-ஆவது ஒருநாள் அரைசதத்தை பதிவு செய்தார். 

தப்பினார் டெய்லர்: சஹல் பந்துவீச்சில் எல்பிடபிள்யு முறையில் ராஸ் டெய்லர் அவுட்டானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் டெய்லர் இதை எதிர்த்து முறையீடு செய்தார். விடியோ காட்சியில் அது அவுட்டில்லை எனத் தெரியவந்ததால்,  நடுவர் தனது முடிவை மாற்றி அறிவித்தார். இதனால் அவுட்டாகும் அபாயத்தில் இருந்து தப்பினார் டெய்லர்.

மான்செஸ்டர் நகரில் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால், ஆட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. நடுவர்கள் மைதானத்தை ஆய்வு செய்வதற்கு கூட வாய்ப்பு இல்லாமல் போனது. 

இதனால் செவ்வாய்க்கிழமை ஆட்டம் முடிவுற்ற இடத்தில் இருந்தே, மாற்று நாளான புதன்கிழமை மீண்டும் தொடங்கி நடைபெறும் எனக் கூறப்பட்டது.

நியூஸிலாந்து அணி 211/5 என்ற நிலையில் மீண்டும் அதில் இருந்தே ஆடத் தொடங்கும். அதன் பின்னர் இந்தியா 50 ஓவர்கள் முழுமையாக ஆடவுள்ளது.

ராஸ் டெய்லர் 67 ரன்களுடனும், டாம் லத்தம் 3 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய தரப்பில் புவுனேஷ்வர் குமார், பும்ரா, ஹார்திக், ஜடேஜா, சஹல் உள்ளிட்டோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர்.

கடும் மழையால் ஆட்டம் நிறுத்தம்
46.1 ஆவது ஓவரின் போது, நியூஸிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்களை எடுத்திருந்தது. எனினும் அப்போது பலத்த மழை பெய்ததால்,  ஆட்டம் நிறுத்தப்பட்டு, பிரதான பிட்ச் பாதுகாப்பாக உறையால் மூடப்பட்டது.

மழை பாதிப்பால், டக்வொர்த் லெவிஸ் முறையில் ஓவர்கள் குறைக்கப்பட்டு மீண்டும் ஆட்டத்தை தொடங்க வாய்ப்பு குறித்து நடுவர்கள் ஆலோசித்தனர். மழை தொடர்ந்தால், ஆட்டம் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்தே மீண்டும் புதன்கிழமை தொடங்கி நடைபெறும் என அறிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com