சென்னையின் குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ158.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னையின் குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ158.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையின் குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ158.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னையின் குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ158.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர்த் தட்டுப்பாடு குறித்து முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். சென்னையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, அன்பழகன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர். தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உள்ளிட்ட உயரதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.

பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகள் முற்றிலும் வறண்டுவிட்டன. நீராதாரங்கள் வற்றி போன நிலையிலும், குடிநீர் வழங்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் நாள் ஒன்றுக்கு 9800 நடைகள் தண்ணீர், லாரிகள் மூலம் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதை மேலும் அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ158.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் சென்னைக்கு நீர் தரும் ஏரிகளில் 3 டிஎம்சி நீர் இருந்தது. சென்னைக்கான கிருஷ்ணா நீரும் போதிய அளவு கிடைக்கவில்லை. வெறும் 2 டிஎம்சிதான் கிடைத்தது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின்கீழ் 200 மில்லியன் லிட்டர் நீர் பெறப்படுகிறது. ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவர ரூ.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒருநாளைக்கு 10 மில்லியன் லிட்டர் வீதம் சென்னைக்கு ரயிலில் தண்ணீர் கொண்டு வரப்படும். குடிநீர் பிரச்னையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது. தமிழகத்தில் ஒருமுறை 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தருவதாக கூறியதற்கு கேரள முதல்வருக்கு நன்றி. 

தினந்தோறும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தர முடியுமா என கேட்டு கேரள முதல்வருக்கு கடிதம் எழுத முடிவெடுத்துள்ளோம். எனது வீட்டிற்கு தினமும் லாரிகளில் அதிகளவு தண்ணீர் வழங்குவதாக கூறப்படுவது தவறானது. எனது வீடு மற்றும் அமைச்சர்களின் வீடுகளுக்கு லாரிகளில் தண்ணீர் வழங்குவது வழக்கமானதுதான். உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த கேரள முதல்வர் ஒத்துழைக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பியே 5 மாவட்ட மக்கள் இருக்கின்றனர். மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. எந்த கோரிக்கையாக இருந்தாலும், காவிரி மேலாண்மை வாரியத்தில் முன்வைப்போம். மேகதாது அணை கட்டப்பட்டால் ஒரு சொட்டு நீர் கூட தமிழகத்துக்குக் கிடைக்காது. 

நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்பட்டு, அதனடிப்படையில் எவ்வளவு நீர் தர முடியுமோ, அதை தருகிறோம். நடுத்தர மக்களுக்குத் தண்ணீர் கிடைக்க முடிந்த அளவுக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறது. ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து 10 லாரிகள் தண்ணீர் கேட்டால் எப்படி தருவது? தண்ணீருக்கு அல்லல்படும் நேரத்தில் மக்கள் அனைவரும் பகிர்ந்துகொள்ள வேண்டும். அடுத்த 4 மாதங்களுக்குத் தண்ணீர் தேவை என்பதை திட்டமிட்டு, அதற்கேற்ப தண்ணீர் விநியோகிக்கிறோம். மழை நீர் சேமிப்புத் திட்டம் தற்போது குடியரசுத் தலைவர் உரையில் இடம்பெற்றிருக்கிறது. காவிரியை சுத்தம் செய்ய நிதி ஒதுக்கீடு செய்த பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com