சென்னை - திருவண்ணாமலை புதிய ஏசி பேருந்தின் கட்டணம் வெறும்..!

சென்னை - திருவண்ணாமலைக்கு வெகு நாட்களுக்குப் பிறகு சமீபத்தில் பேருந்தில் சென்றவர்களுக்கு பேருந்து கட்டணம் சற்று அதிர்ச்சியை அளித்திருக்கலாம்.
சென்னை - திருவண்ணாமலை புதிய ஏசி பேருந்தின் கட்டணம் வெறும்..!
Published on
Updated on
1 min read

சென்னை - திருவண்ணாமலைக்கு வெகு நாட்களுக்குப் பிறகு சமீபத்தில் பேருந்தில் சென்றவர்களுக்கு பேருந்து கட்டணம் சற்று அதிர்ச்சியை அளித்திருக்கலாம்.

சென்னை - திருவண்ணாமலைக்கு இடையே அல்ட்ரா டீலக்ஸ் பேருந்தில் ரூ.205ம், டீலக்ஸ் பேருந்தில் ரூ.175ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

இதற்கிடைய, தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ. 133 கோடியில் வாங்கப்பட்ட 500 புதிய பேருந்துகளை கொடியசைத்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இயக்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பொது மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ரூ.132.87 கோடியில் 500 பேருந்துகள் தயாராகியுள்ளன. அதில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 8 பேருந்துகளும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 198 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 134 பேருந்துகளும், கும்பகோணம் கழகத்துக்கு 160 பேருந்துகளும் என மொத்தம் 500 புதிய பேருந்துகளின் சேவைகள் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டன.

சாதாரண அல்ட்ரா டீலக்ஸ் மற்றும் டீலக்ஸ் பேருந்துகளுக்கே அதிகக் கட்டணம் வசூலிக்கும் போது ஏசி பேருந்துக்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கப்படுமோ என்று பயணிகள் நினைத்திருந்தனர்.

ஆனால், அல்ட்ரா டீலக்ஸ் பேருந்து கட்டணத்தை விட வெறும் 10 ரூபாய்தான் கூடுதலாக இந்த ஏசி பேருந்துகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை - வேலூர் இடையே இயக்கப்படும் ஏசி பேருந்துக் கட்டணம் ரூ.160 ஆகும். இதே பாதையில் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துக்கு ரூ.150ம், டீலக்ஸ் பேருந்துக்கு ரூ.128ம் கட்டணமாக வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும், சென்னை - திருவண்ணாமலைக்கு ஏசி பேருந்தில் ரூ.215 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துக்கு ரூ.205 கட்டணம் என்பது நினைவிருக்கும்.

அதாவது ஏசி பேருந்துகளில் ஒரு கிலோ மீட்டருக்கு 140 பைசா என்ற வகையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், இரு மார்கத்திலும் இரண்டு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், ஒவ்வொரு நாளும் ஒரு மார்கத்தில் 4 முறை இந்த பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com