தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் பரிசுத்தொகை அறிவிப்பு

தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் பரிசுத்தொகை அறிவிப்பு

தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வி கோமதி மாரிமுத்து கத்தார் நாட்டில் தோஹா நகரில் நடைபெற்று வரும் 2019-ம் ஆண்டிற்கான ஆசிய தடகள போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று, இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்ததையொட்டி, அவரை பாராட்டி, 23.4.2019 அன்று வாழ்த்துக்கடிதம் அனுப்பியிருந்தேன்.

அதேபோன்று, ஆசிய தடகள போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4*400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தய போட்டியில், வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை புரிந்த ஆரோக்கியராஜீவ்வையும் பாராட்டி 24.4.2019 அன்று வாழ்த்துக்கடிதம் அனுப்பியிருந்தேன். விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், பதக்கம் வெல்பவர்களுக்கு அவ்வப்போது தமிழக அரசால் உயரிய ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், கத்தார் நாட்டில் தோஹா நகரில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில், தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்த செல்வி கோமதி மாரிமுத்துவுக்கு உயரிய ஊக்கத் தொகையாக பத்து லட்சம் ரூபாயும்; ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4*400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தய போட்டியில், வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவ்-க்கு உயரிய ஊக்கத் தொகையாக ஐந்து லட்சம் ரூபாயும் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

செல்வி கோமதி மாரிமுத்து மற்றும் ஆரோக்கிய ராஜீவ் ஆகிய இருவரும் மேன்மேலும் பன்னாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றிகள் பல பெற அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மாண்புமிகு அம்மாவின் அரசு செய்து தரும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொண்டு, எனது வாழ்த்துகளையும் அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com