இசை கொண்டாடும் இசை...

இளையராஜாவின் பிறந்த நாளான ஜூன் 2-ஆம் தேதி சென்னை ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில்  இசை கொண்டாடும் இசை என்ற தலைப்பில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இசை கொண்டாடும் இசை...
Published on
Updated on
1 min read


இளையராஜாவின் பிறந்த நாளான ஜூன் 2-ஆம் தேதி சென்னை ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில்  இசை கொண்டாடும் இசை என்ற தலைப்பில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
பல்வேறு காலகட்டங்களில் தாம் இசையமைத்த பாடல்களை மேடையில் இளையராஜா அரங்கேற்றி ரசிகர்களின் செவிக்கு விருந்து படைக்க உள்ளார்.
மெர்க்குரி சார்பில் நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சிக்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி நாளிதழ்கள் மீடியா பார்ட்னர்களாக உள்ளன.
இந்நிகழ்ச்சியில், குறிப்பிடத்தக்க அம்சமாக,  தனது இசையில் பாடல்கள் உருவானதன் பின்னணி குறித்த சுவாரஸ்யத் தகவல்களை இளையராஜா மேடையில் கூறவுள்ளார்.பிரபல பின்னணிப் பாடகர்கள் கே.ஜே. ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம்,  பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதுப், மனோ உள்ளிட்ட பலர் பங்கேற்று பாடவுள்ளனர். 
 இந்த ஆண்டு, இளையராஜாவின் 75-ஆவது பிறந்தநாள் ஆண்டாகும். அதற்காக, தமிழகம் முழுவதிலும் வெவ்வேறு கலை மற்றும் கல்வி நிறுவனங்கள் அவருக்குப் பாராட்டு விழாக்களையும், இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றன. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கடந்த பிப்ரவரி மாதம் இளையராஜாவை வைத்து பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றை நிகழ்த்தியது.
இந்த இசை நிகழ்ச்சியில் அவரது சக இசை ஆளுமைகளான கே.ஜே. ஜேசுதாஸ், எஸ்.பி.பி., ஜானகி போன்ற இளையராஜாவின் ஆஸ்தான பாடகர்கள் பங்கேற்று ஒரு பாடல் கூடப் பாடவில்லையே என இசை ரசிகர்கள் வருத்தத்துடன் கருத்தைப் பதிவு செய்தனர். அதிலும் எஸ்.பி.பி. இல்லாமல் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியா? என்று விவாதங்கள் எழுந்தன. 
இந்நிலையில், அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் விதமாக தற்போது எஸ்பிபி, இளையராஜா ஆகிய இரு ஆளுமைகளும் ஒரே மேடையில் இசை விருந்து படைக்கவிருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை மேலோங்கச் செய்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com