பாஜகவில் நடிகை கீர்த்தி சுரேஷ் ?: தாய் மேனகா விளக்கம்

 நடிகை கீர்த்தி சுரேஷ் பாஜகவில் சேர்ந்துள்ளாரா என்பது குறித்து அவரது தாய் மேனகா விளக்கம் அளித்துள்ளார். 
பாஜகவில் நடிகை கீர்த்தி சுரேஷ் ?: தாய் மேனகா விளக்கம்
Published on
Updated on
1 min read

 நடிகை கீர்த்தி சுரேஷ் பாஜகவில் சேர்ந்துள்ளாரா என்பது குறித்து அவரது தாய் மேனகா விளக்கம் அளித்துள்ளார். 
நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா சுரேஷ். இவர் தமிழில் ரஜினியுடன் நெற்றிக்கண் படத்தில் கதாநாயகியாக நடித்தவர். கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ், மலையாள சினிமா தயாரிப்பாளர். கீர்த்தி சுரேஷின் பாட்டியும் நடித்து வருகிறார். 
இந்நிலையில் மேனகா சுரேஷ் தில்லியில் பாஜக  தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்துவிட்டு வந்தது பரபரப்பாகி இருக்கிறது. 
இது குறித்து அவரது சுட்டுரை பக்கத்தில் ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பியிருந்தனர். 
இதற்கு பதிலளிக்கும் விதமாக மேனகா சுரேஷ் வெள்ளிக்கிழமை அளித்துள்ள பேட்டி:
என் கணவர் சுரேஷ் பாரதிய ஜனதா கட்சியில் இருக்கிறார். ஆனால் நான் இப்போது வரை எந்தக் கட்சியிலும் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. கீர்த்தி சுரேஷும் இந்த விஷயத்தில் என்னை மாதிரிதான். கணவர் சார்ந்திருக்கிற கட்சி என்ற முறையில் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தில்லி சென்று இருந்தேன். பிரசாரம் முடிந்த உடன் சினிமா பிரபலங்கள் சிலர் பிரதமர் மோடியைச் சந்திக்க இருக்கிறார்கள். நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டார்கள். 
சுரேஷ் கோபி, கவிதா என்று எனக்கு அறிமுகமான சிலர் இருந்ததால் நானும் கலந்துகொண்டேன். பாரதிய ஜனதா அலுவலகத்திலேயே அந்த சந்திப்பு நடந்தது. 
அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அதுதான் இப்படி வெளியாகியுள்ளது. இதில் கீர்த்தியையும் இணைத்து செய்தியாக்கி விட்டனர்.  ஒரு விஷயத்தை தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். எனக்கோ, என் மகளுக்கோ அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம்  இப்போதுவரை இல்லை என்று தெரிவித்துள்ளார் மேனகா.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com