எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
/

திற்பரப்பு அருவியில் மக்கள் வெள்ளம்

கோடை விடுமுறை நிறைவடையும் நிலையில், திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

News image
Updated On :27 மே 2019, 12:26 am IST

கோடை விடுமுறை நிறைவடையும் நிலையில், திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
தமிழகத்தில்  பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்ட நிலையில், விடுமுறையைக் கொண்டாட மக்கள் அலை அலையாக சுற்றுலாத் தலங்களை நோக்கி படையெடுத்து வந்தனர். 
இந்த நிலையில் இப்போது கோடை விடுமுறை நிறைவடையும் தருணம் வந்துவிட்டது.
இதற்கிடையில், குமரி மாவட்ட மலைப் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால், திற்பரப்பு அருவிக்கு தண்ணீர் வரத்து  அதிகரித்துள்ளது.  
இங்கு இதுவரை இல்லாத வகையில் சுற்றுலாப் பயணிகளின் வரத்து ஞாயிற்றுக்கிழமை அதிகமாக இருந்தது. 
காலை 5 மணி முதல் இரவு வரை மக்கள் வந்து குளித்துச் சென்றனர்.
அதிக சுற்றுலாப் பயணிகள் வரத்து காரணமாக அருவிப் பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவற்கு இடநெருக்கடி ஏற்பட்டது. இதனால், திற்பரப்பு பிரதான சாலைப் பகுதியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் இப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மாத்தூர் தொட்டிப் பாலத்திற்கும் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.