பல வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என்று அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
பல்வேறு வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. ஒரு வாக்குச்சாவடிக்கு குறைந்தபட்சம் 4 முகவர்கள் உள்ளனர். அவர்கள் வாக்கு எங்கே சென்றது?. ஏறத்தாழ 300 வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு வாக்கு கூட விழவில்லை எனத் தகவல் வந்துள்ளது.
முகவர்கள் வாக்கு கூட பதிவாகாமல் இருந்தது குறித்து தேர்தல் ஆணையம் தான் பதில் சொல்ல வேண்டும். மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பை நாங்கள் ஏற்கிறோம். தேர்தலில் மாபெரும் வெற்றியை எதிர்பார்த்தோம். ஆனால் கிடைக்கவில்லை. 10 பேர் கட்சியை விட்டு செல்வதால் அமமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை.
அதிமுகவில் உள்ள ஸிலீப்பர் செல் யார் என்பது குறித்து நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தெரியும். திமுகவிற்கு சென்று செந்தில் பாலாஜி வெற்றிபெற்றது அவருடைய புத்திசாலித்தனமாக இருக்கலாம். தேர்தலுக்கு தேர்தல் மக்களின் மனநிலை மாறும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாதி குறித்து அவதூறு பேச்சு! எஸ்சி ஆணையத்தில் மன்னிப்பு கோரிய மத்திய அமைச்சர்!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

யார் இந்த பில்லிசூன்ய மருத்துவர்? ஹாரி கேனை கோல் அடிக்க விடாமல் தடுத்த கானாவின் மந்திரவாதி!

பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



