தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்குத் தொடரும் மழை: சொல்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்குத் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நான்கு நாட்களுக்கு மழை
நான்கு நாட்களுக்கு மழை

சென்னை: தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்குத் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் வெள்ளியன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் வடகிழக்கு பருவக்காற்று சாதகமாக வீசி வருவதால் அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அத்துடன் அந்தமான் கடற்பகுதியில் வரும் 3 ஆம் தேதி புதிய மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகிறது. இது அதற்கடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற வாய்ப்புள்ளது. இதுவும் மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்வதால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை.

அதேசமயம் அந்தமான் கடற்பகுதியில் ஏற்படும் புதிய மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 4, 5 ஆம் தேதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com