தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை புதன்கிழமை வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை புதன்கிழமை வெளியிடப்பட்டது. வேலூரை பிரித்து வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை என 3 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதுபோன்று நெல்லையை பிரித்து நெல்லை மற்றும் தென்காசி என 2 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. மேலும் காஞ்சிபுரத்தை பிரித்து காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களின் கீழ் செயல்படும் பகுதிகளின் விவரம் வெளியிடப்பட்டது. அதில், தென்காசி, சங்கரன்கோவில் என 2 புதிய வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நெல்லை, பாளையங்கோட்டை, மானூர், நாங்குநேரி, சேரன்மாதேவி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், திசையன்விளை என 8 தாலுகாக்கள் நெல்லை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளன. தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, ஆலங்குளம், சங்கரன்கோவில், திருவேங்கடம், வி.கே. புதூர் என 8 தாலுகாக்கள் தென்காசி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளன. 

பாளையங்கோட்டை, மானூர், நாங்குநேரி, சேரன்மகாதேவி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், திசையன்விளை ஆகிய தாலுகாக்கள் நெல்லை மாவட்டத்தின் கீழ் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சங்கரன்கோவில், செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வி.கே புதூர், திருவேங்கடம், ஆலங்குளம் ஆகிய தாலுகாக்கள் தென்காசி மாவட்டத்தின் கீழ் இயங்கும். குருக்கள் பட்டி, சேர்ந்தமங்கலம், கரிவலம்வந்த நல்லூர், வீரசிகாமணி ஆகிய வருவாய் கிராமங்களை கொண்ட சங்கரன்கோவில் வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 

வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களின் கீழ் செயல்படும் பகுதிகளின் விவரம் வெளியிடப்பட்டது. அதில், வேலூர், குடியாத்தம் என புதிய வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வேலூர், அரக்கோணம், காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் (புதியது) தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன. வேலூரை பிரித்து உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில், வாலாஜா, ஆற்காடு, நெமிலி, அரக்கோணம் என 4 தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன. ராணிப்பேட்டை, அரக்கோணம் என புதிய வருாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றாம்பள்ளி என 4 தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன. திருப்பத்தூர், வாணியம்பாடி என 2 வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் கீழ் செயல்படும் பகுதிகளின் விவரம் வெளியிடப்பட்டது. அதில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர், தாம்பரம், திருக்கழுக்குன்றம் பல்லாவரம், வண்டலூர் என 8 தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் குன்றத்தூர் ஆகிய தாலுகாக்கள் செயல்படும். செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதற்கான அரசாணை இன்னும் பிறப்பிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com