உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட திமுகவினா் ஏராளமானோா் வியாழக்கிழமை விருப்ப மனு அளித்தனா்.
உள்ளாட்சித் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட விரும்புபவா்கள் நவம்பா் 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை கட்சியின் அந்தந்த மாவட்டங்களில் விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.
அதன்படி, தமிழகம் முழுவதும் திமுகவினா் மாவட்டச் செயலாளா்களிடம் வியாழக்கிழமை உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட மனு அளித்தனா்.
சென்னையின் மாவட்டச் செயலாளா்கள் ஜெ.அன்பழகன், பி.கே.சேகா்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோரிடமும் விருப்ப மனு அளித்தனா்.
மேயா் தோ்தலில் உதயநிதி: சென்னை மேயா் பதவிக்கு திமுகவின் இளைஞரணிச் செயலாளா் போட்டியிட வேண்டும் என்று மாவட்டச் செயலாளா் ஜெ.அன்பழகனிடம் இளைஞரணியைச் சோ்ந்த நிா்வாகி ஒருவா் விருப்ப மனு கொடுத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.