தரம்தாழ்த்தும் பிற்போக்காளர்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறபோவதில்லை: திருமாவிற்கு ஆதரவாக பாஜகவுக்கு பா.ரஞ்சித் 'சூடு'!

தரம்தாழ்த்தும் பிற்போக்காளர்கள் எண்ணம் ஒருபோதும்  ஈடேறப்போவதில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக, பாஜகவை இயக்குநர் பா.ரஞ்சித் விமர்சித்துள்ளார். 
பா.ரஞ்சித் - திருமாவளவன்
பா.ரஞ்சித் - திருமாவளவன்
Updated on
1 min read

சென்னை: தரம்தாழ்த்தும் பிற்போக்காளர்கள் எண்ணம் ஒருபோதும்  ஈடேறப்போவதில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக, பாஜகவை இயக்குநர் பா.ரஞ்சித் விமர்சித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் சார்பில் சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய அயோத்தி தீர்ப்பு குறித்து விமர்சித்துப் பேசினார்.

அதில், 'பாபர் மசூதி இருந்த இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அதற்கு கீழே ஒரு கட்டமைப்பு இருந்ததை குறிப்பிட்டுள்ளனர். அகழ்வாராய்ச்சியில் அது இந்து கோயில், மசூதி, தேவாலயம் என்று அறிய முடியாது. ஆனால், அந்த கட்டமைப்பை வைத்து அறியலாம். குவி மாடமாக இருந்தால் மசூதி என்றும் கூம்பு போல இருந்தால் கிறிஸ்தவ தேவாலயம் என்றும் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டடம்' என்றும் பேசினார். இதுதொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

பின்னர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து திருமாவளவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், 'விசிக மகளிர் மாநாட்டில் நான் ஆற்றிய உரையில், ஒருசில சொற்கள் இந்துக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதாக உள்ளது என சிலர் என்னிடம் கூறினர். அவை உரைவீச்சின் போக்கில் தன்னியல்பாக தெறித்த சொற்களேயாகும். அதில் உள்நோக்கம் இல்லை; உண்மை உண்டு என்பதை எனது நண்பர்கள் அறிவர். எனினும், அதற்காக நான் வருந்துகிறேன் என தெரிவித்தார்.

திருமாவளவன் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பாஜக ஆதரவு நிலைப்பாடு கொண்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜக தலைவர்களும் பலத்த கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தரம்தாழ்த்தும் பிற்போக்காளர்கள் எண்ணம் ஒருபோதும்  ஈடேறப்போவதில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக, பாஜகவை இயக்குநர் பா.ரஞ்சித் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் புதனன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது

ஒரு கருத்தையொற்றி எதிர்வைக்கப்படும் விமர்சனம் விவாதத்தை ஏற்படுத்த வேண்டும்.ஆனால் இங்கு விமர்சனங்களாக வசைகள்,தனிமனித தாக்குதல்கள்&அவதூறு நிகழ்த்தப்படுவது இவர்களுக்கு பண்பாடாகவே இருக்கிறது.அண்ணன் #திருமா அவர்களை தரம்தாழ்த்தும் பிற்போக்காளர்கள் எண்ணம் ஒருபோதும்  ஈடேறபோவதில்லை!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com