
சென்னை: ரஜினி அரசியலுக்கு வரட்டும்; ஐ ஆம் வெய்ட்டிங் என்று நடிகர் விஜய் பாணியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
இதுதொடர்பாக புதனன்று மதுரையில் நடந்த நிகழ்வு ஒன்றில் அவர் பேசியதாவது:
நடிகனை அரசியலுக்கு வா என அழைக்கும் அவலம்தான் இன்றைக்கு உள்ளது; ரஜினி அரசியலுக்கு வரட்டும்;ஐ ஆம் வெய்ட்டிங்
வரும் தேர்தலில் வீட்டிற்கு இலவசமாக கார் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிடவுள்ளேன்
பாஜகவிற்கும், காங்கிரசுக்கும் உள்ள வித்தியாசம், நாட்டை யார் விரைந்து விற்பது என்பதில் தான்
ஆளுங்கட்சி மக்களை ஏமாற்றி வரும் நிலையில் நாங்கள் மக்களை மாற்ற முயற்சிக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.