தமிழ் எழுத படிக்கத் தெரியாதவர்கள் கீழமை நீதிபதிகளா? மா. கம்யூனிஸ்ட் கடும் கண்டனம் 

தமிழ் எழுத படிக்கத் தெரியாதவர்கள் கீழமை நீதிமன்ற நீதிபதிகளாக வழி செய்யும் தமிழக அரசின் அறிவிப்பைத் திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.
மா. கம்யூ., மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்
மா. கம்யூ., மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்
Updated on
1 min read

சென்னை: தமிழ் எழுத படிக்கத் தெரியாதவர்கள் கீழமை நீதிமன்ற நீதிபதிகளாக வழி செய்யும் தமிழக அரசின் அறிவிப்பைத் திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் செவ்வாயன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கீழமை நீதிமன்ற  நீதிபதிகள் நியமனத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையை மாற்றி தற்போது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தமிழ் எழுத படிக்கத் தெரியாதவர்களும் கீழமை நீதிமன்ற  நீதிபதிகள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், நீதிபதிகளாக தேர்வு பெற்றபின்பு பயிற்சிக் காலத்தில் தமிழ் கற்றுக்கொண்டு தமிழ்மொழி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்று அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பினால் தமிழக வழக்கறிஞர்கள் புறக்கணிப்பட்டு, தமிழ் தெரியாத இதர மாநிலத்தவர்களும் பணியில் அமரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ்மொழி தெரியாதவர்களை கீழமை நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பது பல்வேறு உயர்நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணனாது ஆகும். தமிழகத்தில் தமிழ் தெரியாதவர்கள் கீழமை நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பது நீதிபரிபாலனத்தில் பல்வேறு சிரமங்களை மக்களுக்கு ஏற்படுத்தும். கீழமை நீதிமன்ற கட்டமைப்பை சிதைக்கும் விதமாகவும், நீதிபரிபாலன முறையில் மக்களை அந்நியப்படுத்தும் விதமாகவும் இருக்கும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இந்நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு தமிழை புறக்கணிக்கிற நடவடிக்கையாக அமைந்துள்ளது.

எனவே இந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் உடனடியாக திரும்பப் பெறவேண்டுமென்றும்; ஏற்கனவே நடைமுறையில் உள்ள தமிழை உள்ளடக்கிய தேர்வை நடத்த வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com