உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான பணி நியமனம்: தமிழக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம் 

உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான விஜிலென்ஸ் ஆணையர் பணி நியமனம் செய்யப்பட்டிருப்பது குறித்து  தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான விஜிலென்ஸ் ஆணையர் பணி நியமனம் செய்யப்பட்டிருப்பது குறித்து  தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

செவ்வாயன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்,  உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக  சண்முகம் IAS விஜிலென்ஸ் ஆணையராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:

விஜிலென்ஸ் ஆணையம் & லஞ்ச ஒழிப்புத் துறையின் கூடுதல் பொறுப்பு திரு.சண்முகம் IAS அவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது! இது ஆணையத்தின் சுதந்திரத்தைப் பறிக்கும்.

இந்த உத்தரவை உடனே ரத்து செய்து, அப்பதவிக்கென தனியாக மூத்த IAS அதிகாரியை நியமிக்க வேண்டும்!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com