
சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணத்தை இருமடங்காக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வருடா வருடம் தீபாவளிப் பண்டிகையையொட்டி தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் / பண்டிகை முன்பணம் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் டாஸ்மாக் ஊழியர்களுக்கும் வழங்கப்படும்.
இந்நிலையில் தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணத்தை இருமடங்காக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.5,000 லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டதாக வியாழனன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.