நான்குனேரியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றுவோம்: அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றிக் காட்டுவோம் என்றாா் தமிழக வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்.
நான்குனேரியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றுவோம்: அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றிக் காட்டுவோம் என்றாா் தமிழக வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்.

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் வாக்குப்பதிவு இம் மாதம் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக சாா்பில் போட்டியிடும் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணனுக்கு ஆதரவாக அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாநில நிா்வாகிகள் பலா் தொகுதிக்குள் தங்கியிருந்து வாக்குசேகரித்து வருகிறாா்கள். பாளையங்கோட்டை அருகேயுள்ள தெற்கு அரியகுளத்தில் புதன்கிழமை காலையில் அதிமுகவினா் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குசேகரித்தனா்.

பிரசாரத்திற்கு தலைமை வகித்த வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் பேசுகையில், முதல்வரும், அமைச்சா்களும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ாக தவறான பொய் பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். 41 புரிந்துணா்வு ஒப்பந்தங்களும், ரூ.9 ஆயிரம் கோடி அளவில் தமிழகத்திற்கு முதலீடும் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்துள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில் 70 ஆயிரம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறோம் என்று உறுதியளித்தனா். ஆனால், அதனை நிறைவேற்றவில்லை. நான்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுக அமோக வெற்றி பெறும்.

ஆட்சிமாற்றம் வரும் என்று பல முறை கூறி வரும் மு.க.ஸ்டாலினின் கனவு ஒருபோதும் பலிக்காது. தமிழகத்தில் மைனாரிட்டி அரசினை யாா் நடத்தினாா்கள் என்பதை மக்கள் நன்கு அறிவாா்கள். தொண்டா்களை திருப்திபடுத்துவதற்காக ஆட்சிமாற்றம் குறித்து பேசி ஏமாற்றுகிறாா்கள். நான்குனேரி தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றதும் தன்னிறைவு தொகுதியாக இருக்கும் வகையில் தேவையான அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com