இமயமலைக்கு புறப்பட்டார் ரஜினிகாந்த்!

தர்பார் படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீகப் பயணமாக இன்று இமயமலைக்குப் புறப்பட்டார். 
Rajinikanth
Rajinikanth
Published on
Updated on
1 min read

தர்பார் படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீகப் பயணமாக இன்று இமயமலைக்குப் புறப்பட்டார். 

லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்பார்' படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் நடித்துள்ளார். படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத்.

தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்தது. அடுத்ததாக,  சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருப்பதாகவும், இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

வழக்கமாக, முக்கிய வேலைகள் முடிந்ததும் இமயமலைக்கு பயணம் மேற்கொள்ளும் ரஜினி, தர்பார் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இன்று ஆன்மீகப் பயணமாக இமயமலைக்கு புறப்பட்டார். இந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு வந்த பிறகு, அவரது அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று தெரிகிறது.

அதேபோல, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிட இருப்பதாக ரஜினி ஏற்கனவே தெரிவித்துள்ளார். எனவே, அரசியல் களத்தில் முழுமையாக கால் பதிப்பதற்கு முன்னதாக, ரஜினி இந்த ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டிருப்பார் என்றும் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com