"நீரும் ஊரும்' திட்டம்: புதுச்சேரி முதல்வர் தொடக்கி வைத்தார்

புதுச்சேரியில் "நீரும் ஊரும்' திட்டத்தை முதல்வர் வே. நாராயணசாமி வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.
"நீரும் ஊரும்' திட்டம்: புதுச்சேரி முதல்வர் தொடக்கி வைத்தார்

புதுச்சேரியில் "நீரும் ஊரும்' திட்டத்தை முதல்வர் வே. நாராயணசாமி வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.
புதுவை அரசு நிலத்தடி நீர் வளத்தைப் பாதுகாக்கும் விதமாக  "நீரும் ஊரும்' என்ற புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழா சட்டப்பேரவை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி திட்டத்தை தொடக்கி வைத்தார். அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர், முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் குடிநீர், வீட்டு உபயோகம், விவசாயம், தொழில்சாலைகள் போன்றவற்றுக்காக நிலத்தடி நீர் அளவுக்கு மீறி உறிஞ்சப்படுகிறது. இதனால் வருங்காலத்தில் மாநிலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படலாம்.
புதுவை மாநிலத்தில் உள்ள 84 ஏரிகள், 609 குளங்களைத் தூர்வாரி, மழை காலங்களில் நீரைச் சேகரித்து வைத்தால், நம்முடைய மாநிலத்தின் நீர்த் தேவையை நிறைவு செய்ய முடியும். 
இதைக் கருத்தில் கொண்டு புதுவை மாநிலத்தில் உள்ள பல்வேறு துறைகளை இணைந்து புதுச்சேரி, காரைக்காலில் மாவட்ட ஆட்சியர்கள், தனியார் பங்களிப்பை ஏற்று ஏரிகள், குளங்களைத் தூர்வாரியுள்ளனர். குறிப்பாக, 72 நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு, புனரமைக்கப்பட்டுள்ளன. 27- க்கும் மேற்பட்ட மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 40 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அனைத்தித் தரப்பினரும் தண்ணீரைச் சேகரிக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com